தேனீக்கள்
ஈக்களே தேனீக்களே
எங்கே போறீங்க?
தேனெடுக்க பூ பூவாக
தேடீப்போறீங்க?
பூக்கள்தோறும் தேனுறிஞ்சி
சேர்க்கப்போறீங்க!
சேர்த்த தேனை செலவில்லாமல்
காக்கப்போறீங்க!
பறக்கும்போது பாடுகின்ற
பாட்டப் பாடுங்க - உங்க
பாட்டக் கேட்டுக் கொண்டு நாங்க
ஆடப்போறோங்க!
சுறுசுறுப்பாய் வாழ
நீங்க சொல்லித்தாருங்க-இந்த
சோம்பேறி மனிதர்களை
மாற்றித்தாருங்க!
ஒற்றுமையா வாழ நீங்க
கற்றுக்கொடுங்க-இந்த
உலகத்துல மனிதர்களா
வந்து மாறுங்க!
கட்டுப்பாடு கடமையெல்லாம்
கற்றுத்தாருங்க-நாங்க
காலமெல்லாம் வாழநல்ல
வழியச் சொல்லுங்க?
தேனீக்களே தேனீக்களே
தேடி வர்றோங்க-நீங்க
தேனெடுக்க போனகதைய
திருப்பிச் சொல்லுங்க!
மிக அருமையான குழந்தைப் பாடல். தொடர்ந்து எழுதுங்கள்!
பதிலளிநீக்கு