செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

நிலா



நிலா

வட்ட நிலா வானத்துல 
மிதக்குது - அதை தொட்டுவிட
என்மனசு துடிக்குது.

வெள்ளித்தட்டு பளிச்செனவே
மின்னுது - அது வீட்டுக்
கிணற்று தண்ணீரிலே ஒளிருது.

கிணற்றுக்குள்ளே வானம் ஒன்னு
தெரியுது - நிலா கீழிறங்கி வந்ததுபோல்
மின்னுது.

வெள்ளைப் பொட்டு நெற்றியிலே 
வேண்டுமே - நான் இட்டுக்கொள்ள 
நிலாவே நீ போதுமே

எட்டிப் பார்த்தேன் ஒட்டிக்கொள்ள
வேண்டினேன் - என்நெற்றி
பொட்டாய் நிலாவினையே மாற்றினேன்.

முழுநிலவு இருட்டையெல்லாம் 
துரத்துது - வீட்டு தோட்டத்திலே
இரவு பகலானது.

ஓடிவிளையாடிட இதுநேரமே
எங்கள் ஒட்டுரக்கம் உன்னாலே
தள்ளிப்போகுமே!

களங்கமில்லா நிலாவே உனை
காண்கிறேன்  - உடம்பில் கருப்புக்கோடு
என்னவென்று கேட்கிறேன்.

நிலா சொல்கிறது

அழகுகூட வழியென்னவென்று
கேட்டேன் - இறைவன் அருள
மச்சம் அதை பெற்றேன்!

அழகுநிலா சொன்னதை நான் 
கேட்டேன் - அதை அறிவியலின்
ஆனந்தமாய் பார்த்தேன்.

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

தேனீக்கள்


                  தேனீக்கள்

ஈக்களே தேனீக்களே
எங்கே போறீங்க?
தேனெடுக்க பூ பூவாக
தேடீப்போறீங்க?
பூக்கள்தோறும் தேனுறிஞ்சி
சேர்க்கப்போறீங்க!
சேர்த்த தேனை செலவில்லாமல்
காக்கப்போறீங்க!
பறக்கும்போது பாடுகின்ற
 பாட்டப் பாடுங்க - உங்க
பாட்டக் கேட்டுக் கொண்டு நாங்க
ஆடப்போறோங்க!
சுறுசுறுப்பாய் வாழ
நீங்க சொல்லித்தாருங்க-இந்த
சோம்பேறி மனிதர்களை    
மாற்றித்தாருங்க!
ஒற்றுமையா வாழ நீங்க
கற்றுக்கொடுங்க-இந்த
உலகத்துல மனிதர்களா
வந்து மாறுங்க!
கட்டுப்பாடு கடமையெல்லாம்
கற்றுத்தாருங்க-நாங்க
காலமெல்லாம் வாழநல்ல
வழியச் சொல்லுங்க?
தேனீக்களே தேனீக்களே
தேடி வர்றோங்க-நீங்க
தேனெடுக்க போனகதைய
திருப்பிச் சொல்லுங்க!